சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 06:04
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இக்கோயிலின் பங்குனித் திருவிழா மார்ச் 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிமுதல் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நேர்த்திக்கடனுக்காக ஆடு, கோழி பலியிடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.