பெரியநாதம்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 06:04
அவிநாசி: அவிநாசி வட்டம்,பெரிய நாதம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், 5ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு,சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அவிநாசி அருகே பெரியநாதம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழாவில் கணபதி ஹோமத்துடன்,கலச பூஜைகள், சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.