வழிவிடு முருகன் கோயிலில் மலர் ரதத்தில் சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 12:04
ராமநாதபுரம் : பங்குனி உத்திர விழாவையொட்டி ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா நடந்தது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 27 ல் துவங்கி ஏப். 6 வரை நடந்தது. தினமும் இரவு 8:00 மணிக்கு சண்முகர் அர்ச்சனையும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 5ல் பங்குனி உத்திரம் அன்று பிரம்மபுரீஸ்வரர் கோயில் நொச்சிவயல் ஊருணியில் இருந்து பால்குடம், பால்காவடிகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. இரவு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவின் நிறைவாக நேற்றுமுன் தினம் (ஏப்.6ல்) மின் விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.