ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் டன் கணக்கில் கடல் பாசிகள் குவிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடினர்.
கோடை காலமான ஏப்., முதல் ஜூன் வரை பாக்ஜலசந்தி கடலில் வளரும் கடல் பாசிகள் அறுவடை முதிர்ச்சியில் கடல் பாசிகள் பெயர்ந்து அலை வீசும் திசையில் கரை ஒதுங்கும். அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் அக்னி தீர்த்த கரையில் கடந்த சில நாளாக தினமும் டன் கணக்கில் கடல் பாசிகள் ஒதுங்குகிறது. இந்த பாசிகளை நகராட்சி நிர்வாகம் தினமும் மாலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றி அகற்றி வருகின்றனர். ஆனால் இரவு, பகலில் டன் கணக்கில் குவிந்து கிடக்கும் கடல் பாசிகளால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி செல்கின்றனர். எனவே தினமும் காலையிலும் இப்பாசிகளை அகற்றி சுகாதாரம் பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.