பதிவு செய்த நாள்
08
ஏப்
2023
01:04
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் பங்குனி உற்சவம் 4ம் திருநாளில் இரட்டைசோடசோபசார தீபாராதனை நடந்தது.
சிவசைலம், சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாளுக்கு பங்குனி தேர்திருவிழாவின், ௪ம் திருநாளன்று காலைசுவாமி, அம்பாள்4ம் திருநாள்மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு கோயிலுக்கு எழுந்தருளினர். நள்ளிரவு 12 மணிக்கு பிற்கால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பின்பு திருவிழா மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு, நாரம்புநாதபட்டர், சிவகுரு பட்டர் இரட்டைசோடசோபசார தீபாராதனை நடத்தினர். முன்னதாக அதிகாலையில் தேருக்கு கால்நாட்டப்பட்டது. வரும் 13ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. 14ம் தேதி மாலைசுவாமி, அம்பாள் வெள்ளிசப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளுகின்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரேவதி, ஆய்வாளர் சரவணக்குமார், செயல்அலுவலர் முருகன் மேற்பார்வையில், பங்குனி உற்சவகமிட்டியினர், உபயதாரர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.