பதிவு செய்த நாள்
08
ஏப்
2023
06:04
கல்லக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் பெரம்பலுார்,ஏப்.8- கள்ளக்குறிச்சி கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் ,17ம் நுாற்றாண்டு கட்டப்பட்ட தென்கலை அமைப்பை சேர்ந்ததுமான அரியலுார் கல்லங்குறிச்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருவிழா ஸ்ரீ ராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து,பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம் வழக்கம். இந்த ஆண்டு கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. கோயில் உற்சவர் ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய சுவாமிகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் தொடர்ந்து ஒரு வாரமாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது நேரில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் உற்சவர் கலியுக வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 6 மணிக்கு நிலையத்திலிருந்து புறப்பட்ட தேர் எட்டு மணிக்கு மீண்டும் நிலையத்துக்கு வந்தடைந்தது. மற்றொரு தேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், சேலம், கடலுார் புதுச்சேரி, விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் மேலும் இக்கோவிலில் பக்தர்கள் மொட்டை அடித்து பசு மற்றும் ஆடு கோழி நெல் நவதானியங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கிய நேர்த்திக் கடன் செலுத்தினர்.