காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ தெப்பதிருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 06:04
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ தெப்பதிருவிழா நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து கடந்த 27ம்தேதி மற்றும் 28ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. 29ம் தேதி அஷ்டதிக் பலி பூஜையுடன் கைலாசநாதர் யானை வாகனத்திலும்,30ம் தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் வீதி உலா நடந்தது.1ம் தேதி திருக்கல்யாணம்.3ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்பதிருவிழா நடந்தது. இதில் சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் குழுவினர் தலைவர் வெற்றிசெல்வம்.துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.