மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா பக்தர்கள் பால்குடம், தீமித்தும் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2023 02:04
காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் 94 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பூச்செரிதல் விழாவுடன் தொடங்கியது. ஏப்.2 ஆம் தேதி கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா இன்று நடந்தது. பக்தர்கள் கீழ ஊரணியில் இருந்து பால்குடம் எடுத்து வந்து கணேசபுரம் மாரியம்மன் செலுத்தினார். தொடர்ந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை கரகம், மது முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் பொங்கல் விழாவும் நடந்தது. ஹவுசிங் போர்டு ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா ஏப்.2ஆம் தேதி கொடியேற்றம் மட்டும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இடைச்சியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி, பறவைக் காவடி எடுத்து வந்து சக்தி முத்தாலம்மன் ஆலயத்தில் செலுத்தினர்.