அம்மாபட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி , பாரி வேட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2023 04:04
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி அம்மாபட்டி வலம்புரி விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவில் பூக்குழி இறங்குதல் மற்றும் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி ஏப்ரல் 7 காலை கருப்பு சாமிக்கு பழம் வைத்தல் மற்றும் காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு பூஞ்சோலையில் மலர்களால் கரகம் பாலித்து அம்மன் எழுந்தருளினார். மறுநாள் அதிகாலை மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் ஆலயம் வந்து சேர்தல் நடந்தது. தொடர்ந்து காலை மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடம், ரதம் இழுத்தல், மாலை பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள், அன்னதானம் நடந்தது. மாலை பாரி வேட்டை எனும் புலி வேட்டை பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீரோட்டத்துடன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் விஜயா வீராசாமி, சமூக ஆர்வலர் சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.