புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2023 04:04
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழா காலங்களில் நேர்த்தி கடன் வேண்டி அம்மனை வழிபடுவது வழக்கம். நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பச்ச மடம், ஆண்டத்தம்மன் கோயில், சிங்க ராஜா கோட்டை பெரிய தெரு, சக்கராஜா கோட்டை பகுதி வீடுகளில் பெண்கள் மா விளக்கு, கொழுக்கட்டை பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டனர். மாலை 7:00 மணிக்கு சப்பரத்தில் அம்மன் பச்சமடம், மடத்துப்பட்டி, பெரிய சாவடி, மாடசாமி கோயில் தெரு, அம்பலப்புளி பஜார் வழியே வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.