நாகை காளியம்மன் கோவில் பங்குனி விழா திரளான பெண்கள் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2023 04:04
நாகப்பட்டினம்: நாகை அடுத்த கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காளி திருநடன நிகழ்ச்சியுடன் நடந்த பால் குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக் கொண்டனர். நாகை அடுத்த கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு விழா கடந்த 4 ம் தேதி காப்பும் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள்தோறும் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக நேற்று சேவாபாரதி, விநாயகர் ஆலயத்தில் இருந்து முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் துவங்கியது. காளி திருநடனம் முன் செல்ல ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் சுமந்து சென்றனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.