பதிவு செய்த நாள்
10
ஏப்
2023
04:04
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஏப்., 24 காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்குகிறது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி ஏப்., 23 இரவு 7:00 மணிக்கு அணுக்கையுடன் விழா துவங்குகிறது. ஏப்., 24 காலை 9:30 மணி முதல் 10:15 மணிக்குள் கொடியேற்றமும், மாலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் நந்திகேஸ்வரர், கிளி, குண்டோதரன், சிம்ம, கைலாச கற்பக விருட்சம், அன்னம், ராவண கைலாசம், காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி வலம் வருவர். ஏப்., 30 குதிரை வாகனத்தில் திக் விஜயம், மே 1 காலை விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலமும், மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 2 காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணமும், இரவு யானை மற்றும் பூப்பல்லத்தில் பட்டிணப்பிரவேசம் நடக்கிறது. மறுநாள் காலை 9:15 மணி முதல் 10:15 க்குள் சித்திரை தேரோட்டம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஏப்., 4 தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.