மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2023 08:04
மேட்டுப்பாளையம்: மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சாற்றுடன் திருவிழா துவங்கியது.
மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 13ம் ஆண்டு திருவிழா, நேற்று இரவு,8:00 மணிக்கு பூச்சாற்றுடன் துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. 18ம் தேதி அக்னி கம்பம் நடுதலும், 21ல் திருவிளக்கு பூஜையும், 23ல் கரகம், பூச்சட்டி எடுத்து வருதலும், அதைத் தொடர்ந்து இரவு வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை குழுவினரின் வள்ளிக்கும்மி கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அம்மன் அழைப்பு 25ம் தேதியும், 26ல் பால்குடம் எடுத்தலும், அன்று மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலையில் மாவிளக்கு பூஜையும், 27ல் மஞ்சள் நீராட்டும், 28ல் மறுபூஜையும் நடைபெற உள்ளது. பூச்சாட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.