பதிவு செய்த நாள்
12
ஏப்
2023
01:04
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
உடுமலையில் நுாற்றாண்டுகள் பழமையான, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். உடுமலை நகரம் மட்டுமன்றி, சுற்றுப்புறத்திலுள்ள நுாற்றுக்கணக்கான கிராம மக்களும் பங்கேற்கும், தேர்த்திருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 13ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45க்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டமும் நடக்கிறது. 14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 11:00 மணிக்கு, வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது. 15ம் தேதி, காலை, 8:15க்கு, கொடியிறக்கம், காலை, 11:00க்கு, மகா அபிேஷகம், பகல், 12:00க்கு, மஞ்சள் நீராட்டம், மாலை, 7:00 மணிக்கு, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. திருவிழா காலங்களில், ஏப்., 7ம் தேதி முதல், தினமும், இரவு, 7:00 மணிக்கு, அம்பாள் புஷ்ப அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், ஆன்மிக கலை நிகழ்சிகளும் நடக்கிறது.