பதிவு செய்த நாள்
12
ஏப்
2023
02:04
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி கருடசேவையும், 19ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
நவதிருப்பதி பெருமாள் கோயில்களில் முதல் கோயிலாக கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் , ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்திரை தேரோட்டத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைமுன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம், திருமஞ்சனமும், 6.30மணிக்கு நித்தியல் ஷ்டியும், தொடர்ந்து காலை 10.30மணிக்கு கொடிப்பட்டம் சுற்றி வருதலும், 10.45 மணிக்கு வேதபாராயணங்களுடன் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா பக்தி கோஷம் முழங்க கொடியேற்றமும் நடந்தது. இதில், உபயதாரரான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளர் ஈஸ்வரன், அர்ச்சகர்கள் அனந்தபத்மநாபன், ரமேஷ், நாராயணன், வாசுசீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சிவசுப்பு, வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் உட்பட பலர் கலந்துனர். அதனைத்தொடர்ந்து, பகல் 11.45 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம், மாலை 6 மணிக்கு தங்கத்தோளுக்கினாயனில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. கொடியேற்றத்தினைத்தொடர்ந்து நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், இரவு 7 மணிக்கு பெருமாள் சிம்மம், அனுமார், கருடன், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 9ம் நாளான ஏப்ரல் 19ம் தேதி அன்று தேரோட்டம் நடக்கிறது.