அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, திருநகரம் சாலியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஆயிரம் கண் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா 3 ம் நாள் மண்டகப்படி நடந்தது. இதை முன்னிட்டு ஆயிரம் கண் மாரியம்மன் பாலையம்பட்டி, ராமலிங்க நகரில் உள்ள அம்மன் கோயில், புளியம்பட்டி காலனியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோயிலுக்கு அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனை வரவேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பின் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி, அன்பு நகருக்கு அம்மன் வீதி உலா சென்றார். திரளான பக்தர்கள் வரவேற்றனர்.