பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
09:04
நாகர்கோவில், தமிழ் புத்தாண்டில் குமரி மாவட்ட கோயில்களில் கனி காணும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து சாமி கும்பிட்டனர். கேரளாவில் கனி காணும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். கோயில்களிலும், வீடுகளிலும் சித்திரை ஒன்றாம் தேதி சுவாமி படங்களுக்கு முன்னால், குறிப்பாக கிருஷ்ணன் படத்துக்கு முன்னால் காய், கனிகள், நாணயங்கள், தங்க நகைககள், கண்ணாணடி போன்றவை வைக்கப்பட்டு காலையில் இதில் கண் விழித்து சுவாமி கும்பிடுவர். பின்னர் குளித்து புத்தாடைகள் அணிந்து வரும் போது வீட்டில் மூத்தவர்கள் அனைவருக்கும் நாணயம், ரூபாய் நோட்டுகளை கைநீட்டமாக வழங்குவர். இது கைநீட்டம் ஆகும். கேரளாவில் இன்று சித்திரை பிறப்பதால் சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோயில்களில் இன்று கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுகிது. தமிழ்நாட்டில் நேற்று சித்திரை பிறந்தது. சசீந்திரம் தாணுமாலையர். கன்னியாகுமரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன், நாகர்கேவில் நாகராஜா, குமாரகோவில் முருகன், உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கனிகாணும் நிகழ்ச்சியும், கை நீட்டம் வழங்குவதும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி கும்பிட்டனர். இவர்களுக்கு காய், கனிகளும் வழங்கப்பட்டது.