தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2023 08:04
பழநி: பழநி மலை கோயிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது.
பழநியில் தமிழ் புத்தாண்டு, சோபகிருது வருட முதல் நாளான சித்திரை ஒன்றாம் தேதியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. மலைக்கோயில் செல்ல காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். மலைக்கோயிலில் சித்திரைகனியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. உட்பிரகாரம் முழுவதும் வண்ண பூக்களாலும், கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாரவேல் மண்டபத்தில் முக்கனிகள், வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பல மணி நேரம் தரிசன வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரி வீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்தனர். காவடி எடுத்து, தீர்த்த கலசங்களுடன் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.