மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2023 09:04
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.
மேலும் அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் பக்தர்கள், கோயில் நிர்வாகம் சார்பிலும் தினம், தினம் பட்டுச் சேலைகள், வேட்டிகள், துண்டுகள் சாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை நிர்வாகம் சார்பில் வாரம் ஒரு முறை கோயில் வளாகத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.டி.ஐ.,யில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, 2020 முதல் 2022 ஆண்டு ஏலம் விடப்பட்ட வகையில் ரூ.5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 வருவாய் கிடைத்துள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகை கோயில் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.