Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ... மழையம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு மழையம்மன் கோவிலில் பொங்கல் வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகாசராயருக்கு 1100 கிலோ எடை கொண்ட மண்குதிரை சுமந்து வந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகாசராயருக்கு 1100 கிலோ எடை கொண்ட மண்குதிரை சுமந்து வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2023
10:04

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மண்குதிரை ஊர்வலம்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தலம், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், காசிக்கு நிகரான தீர்த்தம் கொண்டு, காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய தலம் உள்ளிட்ட பெருமைகளை கொண்ட அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சித்திரை தேர் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கொடியேற்றத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நாளில் அவிநாசி அருகே உள்ள சின்ன கருணை பாளையத்திலிருந்து ஊர் மக்கள் சார்பில் அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள ஆகாச ராயர் கோவிலுக்கு மண்குதிரையை அலங்கரித்து தோளில் சுமந்த படி ஊர்வலமாக சென்று வழிபடுவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது.

இந்த ஆண்டும் நேற்று சின்ன கருணைபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மண்குதிரையை மலர்களால் அலங்கரித்து பூஜைகள் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி பெரிய கருணைபாளையம், கவுண்டம்பாளையம், காசி கவுண்டன் புதூர், கோவை சேலம் பைபாஸ் சாலை வழியாக மங்கலம் சாலையை கடந்து ஊர்வலமாக ஆகாசராயர் கோயிலை அடைந்தனர். இதில் வழிநெடுகிலும் பொதுமக்கள் பக்தர்களுக்கு தண்ணீர், நீர் மோர் வழங்கி,மாலை அணிவித்து வரவேற்றனர்.அதன் பின்னர் ஆகாசராயர் கோவிலில் குதிரையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவில் வளாகத்திற்கு வெளியே காத்தவராயருக்கு கிடாய் வெட்டி வழிபட்டனர். மண் குதிரை ஊர்வலத்தில் சின்ன கருணை பாளையம் மற்றும் பெரிய கருணைபாளையம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மண் குதிரையின் சிறப்பு: காலங்காலமாக சின்ன கருணை பாளையத்தில் மண்குதிரையை ஊர் பொதுமக்கள் பங்களிப்பில் செய்து வந்தனர். தற்போது மண் குதிரையை செய்து கொடுத்து வந்த குயவர் இறந்து விட்டார். அதனால், ஈரோடு மாவட்டம், நம்பியூர் புளியம்பட்டி ரோட்டில் உள்ள வேமாண்டபாளையத்தில் இத்தொழிலை செய்து வருகிறார்.தற்போது கடந்த ஒரு மாத காலமாக மண் குதிரை செய்யும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 1100 கிலோ எடை கொண்ட மண் குதிரையை, 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் வெயிலையும் பொருப்படுத்தாமல் பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக செல்வார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar