அருப்புக்கோட்டை கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2023 11:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சொக்கநாதன் சுவாமிக்கும், மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன், முத்து மாரியம்மன், பட்டாபிராமர் கோயில், பழனியாண்டவர் கோயில் உட்பட கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான மக்கள் தரிசனம் செய்தனர்.