திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில் உடனாய வடிவுடையம்மாள், வயிரவசுவாமி கோயில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சித்திரை விஷூ கனி தரிசனம் நடந்தது.
இக்கோயிலில் நேற்று காலை கோ பூஜை,லெட்சுமி பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. தொடர்ந்து அம்பாளுக்கு நாணயங்கள் வைத்து தன பூஜை, பின்னர் வயிரவருக்கு கனி பூஜை நடந்தது. வயிரவர் சன்னதி முன்பாக மா, பலா, வாழை உள்ளிட்ட கனிகள், தென்னம்பாளை, நெல் உள்ளிட்ட நவதானியமணிகள், இனிப்பு உள்ளிட்டவை கண்ணாடி முன்பாக வைக்கப்பட்டது. பக்தர்கள் கண்ணாடி வழியாக கனிகள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி அபிேஷகம் ந டந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் கேடகத்தில் சுவாமி பிரகார வலம் வந்தார். பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்தனர்.