உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூஜைப்பாறை பெருமாள் கோவில். இங்கு பங்குனி உற்சவ திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பல்வேறு காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெறவில்லை. 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலைகள் அருகில் உள்ள வில்லாணி கிராமத்தில் செய்யப்பட்டு சித்திரை முதல் நாளில் சிலை எடுப்பு விழா நடந்தது. வி.பெருமாள்பட்டிக்கு மேளதாளங்கள் வான வெடி முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடுக்கு பின் மலை அடிவாரத்தில் உள்ள பூஜைப்பாறை பெருமாள் கோவிலுக்கு சிலைகள் எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் சாமி சிலைகளுக்கு மாலை மரியாதை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.