பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் விசுபுண்யகால உற்சவம் நடந்தது. இக்கோயிலில் நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் 8:30 மணி தொடங்கி ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு ஐயப்ப சுவாமி அலங்காரமாகி விசுபுண்யகால மஹோத்சவம் கொண்டாடப்பட்டது. பின்னர் இரவு 8:00 மணிக்கு சுவாமி முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து இரவு 10:00 மணிக்கு கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.