திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2023 10:04
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் ஒன்றியம் திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
இக்கோயிலில் பங்குனியில் பத்து நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும். ஏப்.15ல் காப்பு கட்டி விழா துவங்கியது. உற்சவர் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தொடர்ந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச் சொரிதல் நடத்தி வழிபட்டனர். அலங்கார மின் ரதம் பவனி வந்தது. காலை முதல் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். மூலவர் வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு பக்தர்கள் சமர்ப்பித்த பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. திரளாக சுற்றுவட்டாரக் கிராமத்தினர் பங்கேற்றனர்.