திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் 73ம் ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 01:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில், 73 ஆம் ஆண்டு ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், ரமண பகவான் சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. விழாவில், இசையமைப்பாளர், எம்.பி.,மான இளையராஜா கலந்து கொண்டு ரமண பகவானின் கீர்த்தனைகளை பாடி வழிபட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.