தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 01:04
கோவை: தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கொடியேற்றம் இனிதே நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை அவினாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தாண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. விழாவில் 24ம் தேதி திருவிளக்கு வழிபாடு, 25ம் தேதி திருக்கல்யாணம், 26ம் தேதி சக்தி கரகம், அக்னி சாட்டு நிகழ்ச்சி, 27ம் மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், 28ம் தேதி லட்சார்ச்சனை, 30ம்தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவம் நடைபெறுகிறது.