Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ... கோவை ராமநாதபுரம் முத்தியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோவை ராமநாதபுரம் முத்தியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகு நாச்சியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகு நாச்சியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2023
03:04

அவிநாசி: அவிநாசி,கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில்,பொங்கல் பூச்சாட்டு விழாவில்,அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

அவிநாசி,கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவிற்கான காப்புக் கட்டுதல்,நந்தா தீபம் ஏற்றுதல் ஆகியவை கடந்த 11ம் தேதி நடைப்பெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவில், 12ம் தேதி புதன்கிழமை முதல் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை காலை,மாலை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல்,பூவோடு எடுத்தல்,மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து நான்கு ரத வீதிகளில் வழியாக வந்தது.அதில் அம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், ஊர்வலத்தில் பக்தர்கள் 20 அடியில் வேல் மற்றும் கத்தி கொண்டு அலகு குத்தி வந்தனர். பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். நாளை மஞ்சள் நீர்,மஹா அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், அம்மன் திருவீதி உலாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவில் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar