பதிவு செய்த நாள்
21
ஏப்
2023
12:04
பாலக்காடு : கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பூங்குன்னம் அருகே புகழ்பெற்ற ஸ்ரீ சீதாராம சுவாமி கோவில் மற்றும் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் கருவறை முன்பக்கம் தங்கம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து, வரும், 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கோவில் இனையதளம் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் டி.எஸ். கல்யாண ராமன் இணையதளத்தை துவக்கி வைத்தார்.
சீதாராம சுவாமி கோவிலில் இன்று 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, நவகலச ஸ்தாபனம், அபிஷேகம் உள்ளிட்டவையும், சிவன் கோவிலில் ஆச்சாரிய வர்ணம், கணபதி பூஜை உள்ளிட்டவையும் நடக்கின்றன. மகா கும்பாபிஷேக நாளான 27ம் தேதி, சீதாராம சுவாமி கோவிலில் காலை, 6:30 மணிக்கு புண்ணியாஹ வாசனம், நித்ய பூஜை இடம்பெறுகிறது. தொடர்ந்து, 9:30 மணிக்கு ஸ்ரீ லக் ஷ்மணர்-ஆஞ்சநேயர்-சாஸ்தா மற்றும் நவகிரக தேவர்களுக்கு கும்பாபிஷேகமும், விமான கலச அபிஷேகமும் நடக்கிறது.