பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2023 11:04
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று இரவு ராஜகோபுரத்திற்கும், மூலவர், உற்ஸவருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் குருதலமான பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த ஏப்.16ல் சிறப்பு ேஹாமம் நடந்தது. குருப்பெயர்ச்சியான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்து வெள்ளி அங்கி அணிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தல விருட்சமான ஆலமரத்தடியில் முனிவர்கள், கார்த்திகை பெண்கள் முன்னிலையில் மந்திரம் உபதேசிக்கும் அலங்காரத்தில் உற்ஸவர் காணப்பட்டார். காலை முதல் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். குருப்பெயர்ச்சியாகும் இரவு 11:29 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் கோபுரம், உற்ஸவருக்கு 7 முக தீபராதனையும், மூலவருக்கு நட்சத்திர தீபாரதனையும் ஏக காலத்தில் நடந்தது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் அ.வீர.அ.வீரப்பச்செட்டியார் செய்கிறார்.