பதிவு செய்த நாள்
22
ஏப்
2023
11:04
ஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்), குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வெள்ளி கவசத்தில் நின்ற கோலத்திலான ராஜ குருபகவானுக்கு, அலங்கார தீபம் காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர் அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். மூலஸ்தான விமானத்தில் சந்திரகாந்தக்கால் வைத்து கட்டப்பட்டுள்ளது.
அக்கல் சந்திரனில் இருந்து வரும் கதிர்களால் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தன்னுள் உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் மூலவர் வசிஷ்டேஸ்வரர் மீது விழும். இத்தகையை சிறப்பு பெற்ற கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு சாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும். இந்த ஆண்டிற்கான குருபெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் கும்ப ராசியில் இருந்து இன்று (ஏப்.22,2023) இரவு 11:27 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார். மே1, 2024 வரை இங்கு சஞ்சரிப்பார். காலை முதல் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். குருப்பெயர்ச்சியாகும் இரவு 11:29 மணிக்கு மூலவர், உற்ஸவருக்கு 7 முக தீபராதனையும், மூலவருக்கு தீபாரதனையும் ஏக காலத்தில் நடந்தது. குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் பரிகாரம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.