பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
10:04
புதுச்சேரி, : புதுச்சேரியில் சித்தானந்த சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் குருபெயர்ச்சி விழா விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
குரு பகவான் நேற்றிரவு 11.27 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். அதனையொட்டி புதுச்சேரியில் பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடந்தது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சித்தானந்த சுவாமி கோவில்: கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டையுடன் குருபெயர்ச்சி விழா துவங்கியது. இரவு 8 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமத்தை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குருபகவானுக்கு மகா அபி ேஷகம் நடந்தது. பின்னர் குருபெயர்ச்சியையொட்டி இரவு 11.27 மணிக்கு குருபகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சனீஸ்வரர் கோவில்: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் உள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு, குருபெயர்ச்சி மகா யாகம் மற்றும் சிறப்பு லட்ச்சார்ச்சனை நடந்தது.இதற்கான பூஜை நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ேஹாமம், கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமம் நடந்தது பின்னர் 1008 கொழுக்கட்டை நிவேத்தியம் மற்றும் 30 வகையான அபி ேஷகம் நடந்தது. இரவு 11.27 மணிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குரு சாந்திேஹாமம், நவக்கிரக சாந்தி ேஹாமம், நட்சத்திர ேஹாமம், ராசி ேஹாமம், தட்சிணாமூர்த்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹாமங்கள் நடந்தன. ராசி பரிகார ேஹாமத்திற்கு பிறகு குருபகவானுக்கு 1008 லிட்டர் பால் அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி விழாவில் குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் சிதம்பர கீதாராம் குருக்களால் சாற்றப்பட்டது.