பந்தலூர்: பந்தலூர் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. இதில் டான்டீ மகளீர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. உலக அமைதி, கணவன்- மனைவி, குடும்ப ஒற்றுமை, கல்வி, நோயற்ற வாழ்வு போன்றவற்றிற்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்கள் திருவிளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அம்மனின் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமிட்டியினர், பெண்கள் பங்கேற்றனர்.