காரைக்குடி: காரைக்குடி சங்கர மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா இன்று காலை 9.05 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்குகிறது. காலை 10.00 மணிக்கு, டாக்டர் கணேஷ் மற்றும் குழுவினரால் நடத்தப்படும் ஸ்ரீ லலிதாம்பாள் காமேஸ்வர கல்யாண உற்சவமும், மாலை 4.30 மணிக்கு சிவ திவ்ய நாமமும் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் ஜெயந்தி, ஸ்ரீ லலிதாம்பாள் காமேஸ்வர கல்யாணம் நலங்கு, நால்வர் பதிகங்கள் மங்கள மகா ஹாரத்தியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.