மேலுார்: மேலுார், மில்கேட்டில் முனியாண்டி கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி திருவிழா கொண்டாடப்பட்டது. நேற்று பக்தர்கள் 50 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கோழி, சேவல்களை வெட்டி பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவில் மேலுார், மில்கேட், கருத்தபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.