பதிவு செய்த நாள்
25
செப்
2012
10:09
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில், 13ம் ஆண்டாக திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும், தாராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், புரட்டாசி மாதத்தில் மாலை அணிந்து, திருமலை செல்வது வழக்கம். நேற்று முன்தினம் விடியற்காலை, 3 மணிக்கு, தாராட்சி கிராமத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டனர். இவர்கள் ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்தூர், நாராயணவனம் வழியாக திருமலை சென்றனர். வழியில் இவர்களுக்கு, டீ, காபி, அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.