கீழக்கரை: கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் சக்திவேல் முருகன் கோயில் உள்ளது. ஹிந்து தமிழர் பண்பாட்டு பேரவையின் சார்பில் வேல் பூஜை கொண்டாடப்பட்டது. வேலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து தமிழர் பண்பாட்டு பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.