பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
06:04
கலசப்பாக்கம்: திருமாமுடீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை நடை திறக்கப்பட்டு மூலவர், உற்சவமூர்த்திகள், திருமாமுடீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், திருமாமுடீஸ்வரர், திரிபுர சுந்தரமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து கொடிமரம் முன் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், திருமாமுடீஸ்வரர், திரிபுரசுந்தரி, சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மே, 2ல் தேரோட்டம், 5ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறும்.