பதிவு செய்த நாள்
01
மே
2023
03:05
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (மே.,2) காலை நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது. அலைபேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்ற வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (2ம்தேதி) நடக்கிறது. விழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் புறப்பட்டு வந்தனர். விழாவில், நாளை அதிகாலை 4 மணியளவில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். தொடர்ந்து, நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக பக்தர்களுக்கு இலவச அனுமதி உண்டு. முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், அரசு அதிகாரிகள், ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ளவர்கள் வடக்கு வழியாக அனுமதிக்கப்படுவர். எந்தவொரு பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரே விழா கோலாம் பூண்டுள்ளது.
வாகனம் நிறுத்துமிடங்கள்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை(மே 2)காலை 8:35 மணி - 8:59 மணிக்குள் நடக்கிறது. மே 1 இரவு 12:00 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்ல, நிறுத்த அனுமதியில்லை. மே 2 காலை 6:00 மணி முதல் அனுமதி சீட்டுடன் வருவோர் கீழ்கண்ட இடத்தில் நிறுத்தலாம். மே 2 அதிகாலை 5:00 மணி முதல் திருக்கல்யாணம் காண கார், டூவீலரில் வரும்,அனுமதி சீட்டு இல்லாதோர்கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் வாகனங்களை இடையூறின்றி நிறுத்தலாம். கீழ ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.