பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
திருச்சி: குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரசித்திப்பெற்ற, புரட்டாசி மாத தேரோட்டம் இன்று நடக்கிறது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தென்திருப்பதி என்று போற்றப்படுகிறது. புரட்டாசி மாதம், ஒன்றாம் தேதி பிரம்மோற்ஸவ உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் மற்றும் வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப வாகனம், குதிரை வாகனத்தில், உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி, திருவீதியுலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை, 7.30 மணிக்கு நடக்கிறது. உபயநாச்சியார்களுடன் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். 10 மணிக்கு வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, 5 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. நாளை, இரவு, 9.30 மணிக்கு சப்தாவரணம் உற்சவமும், மறுநாள் இரவு, 8 மணிக்கு ஆடும் பல்லாக்கு உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்கின்றனர்.