பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
கரூர்: தாந்தோணி கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. இன்று காலை திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.கரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாந்தோணி வெங்கடரமண ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் "பிரம்மோற்சவ விழா நடக்கிறது. கடந்த, 15ம் தேதி கருட வாகனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 18ம் தேதி துவஜாரோஹணம், 21ம் தேதி வெள்ளி கருட சேவை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம செய்தனர்.இன்று காலை 9 மணிக்கு திருத்தேர் ஊர்வலமும், 4ம் தேதி ஹனுமந்த வாகனம், 7ம் தேதி முத்து பல்லக்கு, 8ம் தேதி ஆளும் பல்லக்கு, 9ம் தேதி புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளான வரும், 29ம் தேதி, அக்டோபர் மாதம், 6ம் தேதி மற்றும், 13ம் தேதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.