ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு ஸ்ரீவி., ஆண்டாள் சூடி கலைந்த மங்களப் பொருட்கள் மதுரை வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 04:05
மதுரை: மதுரையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் சூடிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் மதுரை கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஆண்டாள் கோயில் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை, கிளிபட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் கோயில் உட்பிரகாரம், மாட வீதிகள்சுற்றி வந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டார்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை உள்ள மண்டபங்களில் ஆண்டாள் மாலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மே 5 அதிகாலை கள்ளழகர், ஆண்டாள் மாலை அணிந்து ஆற்றில் இறங்குகிறார்.