பாலமேடு: பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டி ஆயிரவைசியர் இந்து சோழிய செட்டியார் உறவின்முறை அழகு முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா நடந்தது. திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு கரகம் ஜோடித்து முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். மாவிளக்கு, பால்குடம், 51 அக்னிச்சட்டி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பக்தர்கள் வழிபட்டனர். மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.