அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா ; அடிப்படை வசதிகள் கலெக்டர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 03:05
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 5ம் தேதி சித்ரா பௌர்ணமியில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்வர். பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கும், போதிய அடிப்படை வசதிகள் குறித்தும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ்.பி., கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தனர்.