காளஹஸ்தி சிவன் கோயிலில் நித்ய அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 11:05
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர ஸ்வாமி வாரி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரிடம் கோயிலில் நடக்கும் நித்ய அன்னதான திட்டத்திற்காக பத்து லட்சத்து நூற்று பதினாறு ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர தேவஸ்தானத்தில் நடக்கும் நித்ய அன்னதான திட்டத்திற்காக ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த அஷ்டலக்ஷ்மி என்ற பக்தர் மற்றும் அவரது தோழமை குழுவினர் அவுனாஷ், ஆனந்த், கணேஷ் ஆகியோர் இணைந்து (பத்து இலட்சத்து நூற்று பதினாறு ரூபாய்) 10,00,116/-கான காசோலையை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு விடம் ஒப்படைத்தார். முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கிய தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள் கருணா குருக்குள் மேலும் இவர்களுடன் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.