சாத்தூரில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2023 03:05
சாத்துார்: சாத்தூரில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.
சாத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கம். சித்ரா பௌர்ணமி பெரும் திருவிழாவை முன்னிட்டு பெருமாள் சுவாமி கள்ளழகராக வைப்பாற்றில் இறங்கி பக்தர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக்கொண்டு பின்னர் பெரிய கொல்லப்பட்டி கோயிலுக்கு செல்வது வழக்கம். சாத்தூர் வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு கள்ளழகராக குதிரையில் வீற்றிருந்த சுவாமி நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து வைப்பாற்றில் 12:00 மணிக்கு இறங்கினார். அங்கு மருத்துவ குல சங்கத்தினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்ணில் எழுந்தருளினார். பின்னர் செண்டா, மேளம், முழங்க பெரியகொல்லபட்டி கிராமத்தை சென்றடைந்தார். அங்கு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சுவாமி அருள் பாலித்தார். டி.எஸ்.பி வினோ ஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.