வைகை ஆற்றில் குவியும் பக்தர்கள் வீசி எறியும் துணிகள் ; பொதுப்பணித்துறை பாராமுகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 05:05
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் பக்தர்கள் வீசி எறியும் துணிகள் மலை போல குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் நிலவி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கை,காசியை விட வீசம் பெரியது என போற்றப்படும் இந்த தலத்தில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுப்பதுடன் வைகை ஆற்றில் நீராடும் போது பழைய துணிகளை அப்படியே ஆற்றினுள் வீசி எறிகின்றனர். பக்தர்கள் வீசி எறிந்த துணிகளை யாரும் அப்புறப்படுத்துவதில்லை. வைகை ஆற்றினுள் பக்தர்கள் வீசி எறிந்த துணிகள் மலை போல குவிந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அனுப்பியும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. பேரூராட்சி சார்பில் துணிகளை வீசி எறிய கூடாது என பெயரளவிற்கு அறிவிப்பு பலகை வைத்ததுடன் சரி வேறு எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ள போது பழைய குளிக்க செல்பவர்கள் பழைய துணிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே வைகை ஆற்றில் துணிகளை வீசி எறிபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.