பாலமேடு: பாலமேடு அருகே வைகாசிபட்டி கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோயில் சாத்தையாறு அணை அருகே உள்ளது. இக்கோயில் சித்திரை உற்ஸவ விழாவை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மா, புளி, கொய்யா உள்ளிட்ட விளை பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். விநாயகர், கந்தன், ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் உப்பு, மிளகு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். சாத்தையாறு அணை விவசாய நண்பர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.