தலைச் சுமையாக ருத்ராட்ச லிங்கத்துடன் செல்லும் சிவனடியார்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 06:05
உத்தரகோசமங்கை; தமிழகத்தின் புகழ்மிக்க சிவாலயங்களில் நடத்தப்படும் தேரோட்டங்களில் பங்கு பெறுவதற்காக ஏராளமான சிவனடியார்கள் வருகை தருகின்றனர்.
கையிலை வாத்தியங்களை இசைத்தும் ஆடியும் பாடியும் நடனமாடியும் சிவ நாம உச்சரிப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சிவனடியார்கள் மகேஸ்வரன் 31 மற்றும் கோவை வடமதுரை சேர்ந்த சிவனடியார் சிவமணி 38 ஆகிய இருவரும் சேர்ந்து ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை அழகுற வடிவமைத்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக தலைச் சுமையாகவே கொண்டு செல்கின்றனர். சிவனடியார்கள் மகேஸ்வரன், சிவமணி ஆகியோர் கூறியதாவது; சிவாலயங்களில் நடக்கக்கூடிய தேரோட்டம் எங்கு நடந்தாலும் நாங்கள் இருவரும் அங்கு சென்று விடுவோம். 2000க்கும் அதிகமான ருத்ராட்சங்களால் அழகுற ஆபரணங்களுடன் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்தை தலையில் வைத்து தேரோட்டத்திற்கு முன் செல்வோம். இதனால் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவபெருமானை வணங்குகின்றனர். சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ரயில் மூலமாக ராமேஸ்வரம் வந்து நிறைவாக உத்தரகோசமங்கையில் நடந்த தேரோட்டத்திற்கு வந்தோம். ஆன்மீக வழிபாடுகளின் மூலமாகவே, உலகில் அமைதி எப்பொழுதுமே நிலவும் என்றனர்.