சேவுகப்பெருமாள் கோயிலில் திருப்பணி மும்முரம்; ஜூன் 1ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 03:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் ஜுன் 1 ல் நடக்கிறது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் நடக்கிறது. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்படுகிறது. கோவில் முன்பாக உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த ஐயனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணப் பூச்சுகள் முடிவுரும் தருவாயில் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 1 ம் தேதி கும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராம.அருணகிரி, முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பணி குழுத்தலைவர்: இதற்கு முன்பு 1973 மற்றும் 2001 வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டது. இந்தாண்டு கும்பாபிஷேகத்தை சிறப்புடன் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. உபயதாரர்களின் பங்களிப்பு திருப்பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று 20 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்க பிரமாண்ட ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.